வீரம் மரப்புலி உடலின், மான்கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90) 2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே எலிமுயன்றனையராகி உள்ளதம் வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190) 3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா? நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் இலை; வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51) 4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196 5.சான்றோர் சன்றோருடன் சேருவர் என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218) 6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!! ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும்...